/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தற்காலிக கடை அமைக்ககாங்கேயத்தில் 21ல் ஏலம்
/
தற்காலிக கடை அமைக்ககாங்கேயத்தில் 21ல் ஏலம்
ADDED : ஜன 19, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்காலிக கடை அமைக்ககாங்கேயத்தில் 21ல் ஏலம்
காங்கேயம், :காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நடக்கவுள்ளது. இதையொட்டி கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதற்கான ஏலம் வரும், ௨௧ம் தேதி காலை, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கவுள்ளது.
ஏலம் கோர விரும்புவோர், ஏலம் ஆரம்பிக்கும் முன் முன்பணம் செலுத்த வேண்டும். அல்லது அதற்கு இரண்டு மடங்கு சொத்து மதிப்பு சான்று சமர்ப்பிக்க வேண்டும். வைப்புத் தொகை செலுத்தாதவர்களுக்கு ஏலத்தில் அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.