ADDED : ஜன 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவல் சூதாடிய 23 பேர் கைது
கோபி, :கவுந்தப்பாடி போலீசார், வைரமங்கலம் மற்றும் பேராயூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வைரமங்கலத்தில் இரு சேவல்கள் வைத்து சூதாடியதாக, அதே பகுதியை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். சேவல்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பேராயூர் பகுதியில் நான்கு சேவல்களுடன் சூதாடிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்களிடம், ௧௨ ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
* நம்பியூர் அருகே பொலவபாளையத்தில், வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எஸ்.வி.என்.நகரில், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட, ௧௨ பேரை கைது செய்து, மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.