/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் 351 டன் விதை இருப்பு
/
ஈரோடு மாவட்டத்தில் 351 டன் விதை இருப்பு
ADDED : மார் 02, 2025 07:05 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்காக, 351 டன் விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்-டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீ., நடப்பாண்டு கடந்த, 28 வரை, 7.52 மி.மீ., பெய்துள்ளது. பல்-வேறு நிலைகளில் பாசனப்பணி நடந்து வரும் நிலையில், வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 261.4 டன், சிறுதானியங்கள், 28 டன், பயறு வகை, 13 டன், எண்ணெய் வித்துக்கள், 49 டன் என, 351.4 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா, 7,171 டன், டி.ஏ.பி., 2,662 டன், பொட்டாஷ், 4,668 டன், காம்ப்ளக்ஸ், 7,287 டன் என நடப்பு பருவத்துக்கு தேவை-யான இடுபொருட்கள் இருப்பில் உள்ளன.
பி.எம்.கிசான் நிதியு-தவி பெறும் விவசாயிகள், தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதை உறுதி செய்தால் மட்-டுமே, திட்ட பயன்கள் தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு கூறினர்.