/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்து முன்னணியினர்கோபியில் 37 பேர் கைது
/
ஹிந்து முன்னணியினர்கோபியில் 37 பேர் கைது
ADDED : மார் 09, 2025 01:36 AM
ஹிந்து முன்னணியினர்கோபியில் 37 பேர் கைது
கோபி:தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹிந்து முன்னணியினர், 37 பேரை கோபி போலீசார் கைது செய்தனர்.
வேடசந்துார் குங்கும காளியம்மன் கோவிலுக்கு சென்ற, மாநில செயலாளர் செந்தில்குமாரை கைது செய்ததை கண்டித்து, ஹிந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை, 5:00 மணிக்கு குவிந்தனர். அப்போது மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலர் பாலமுருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயலர்கள் சம்பத், தமிழ்ச்செல்வன், மணிகண்டபிரபு உள்ளிட்டோரும் குவிந்தனர். பின் கோஷம் எழுப்பி, கோபி பஸ் ஸ்டாண்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 37 பேரை போலீசார் கைது செய்தனர்.