/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை அருகேதீ விபத்தில் 5 குடிசை சேதம்
/
பெருந்துறை அருகேதீ விபத்தில் 5 குடிசை சேதம்
ADDED : பிப் 20, 2025 01:53 AM
பெருந்துறை அருகேதீ விபத்தில் 5 குடிசை சேதம்
பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, பாரதி நகரில் நேற்று ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, ஐந்து குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது.
பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பாரதி நகரில் பொன்னுசாமி, 45, ராமசாமி, 42, சுந்தரம்மாள், 60, ஜெயம்மாள், 72, மற்றும் நல்லாள் ஆகியோர் குடிசை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல், அனைவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், பகலில் ஏதோ ஒரு குடிசையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றிக் கொண்டது. இதில், ஐந்து குடிசை வீடுகளும் முழுவதும் எரிந்தது.
பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மேலும் தீ பரவாமல் இருக்க தீயை முழுவதும் அணைத்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது.

