/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் முதற்கட்ட ஆய்வு
/
அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் முதற்கட்ட ஆய்வு
ADDED : ஜூலை 06, 2024 06:07 AM
அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் நடப்பாண்டு ஆடி தேர்தி-ருவிழா, ஆக., 7ம் தேதி நடக்கவுள்ளது. இதை தொடர்ந்து, 8, 9, 10, 11 என தேதிகளில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கால்-நடை சந்தை நடக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள், மக்கள் வருவர். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள, கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று முதற்கட்ட ஆய்வு நடந்தது.
இதில் போலீசார், வருவாய் மற்றும் சுகாதார துறையினர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். குருநாதசு-வாமி கோவில் வளாகம், வனக்கோவில், கால்நடை சந்தை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர். வாகனங்-களில் வருபவர்களுக்கு ஒரு வழிப்பாதை அமைப்பது, கடைகள் அமைப்பது பற்றி ஆலோசித்தனர். இனி இரண்டாம் கட்ட ஆய்வில், கலெக்டர் ஈடுபடுவார். அதன் பிறகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரி-வித்தனர்.