/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீரன் சின்னமலை விழா குறித்து ஆலோசனை
/
தீரன் சின்னமலை விழா குறித்து ஆலோசனை
ADDED : ஜூலை 31, 2024 07:17 AM
ஈரோடு: அரச்சலுாரை அடுத்த ஓடாநிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு ஆடிப்பெருக்கு விழா வரும் ஆக., 3ல் நடக்க உள்-ளது. இதற்கான முன்னேற்பாடு பற்றிய ஆலோ-சனை கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், எஸ்.பி., ஜவகர் முன்னிலை வகித்தனர். பொது-மக்கள், பல்வேறு அமைப்பினர் அங்கு வரு-வதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன போக்கு-வரத்தை ஒழுங்குபடுத்தி, ஒரு வழிப்பாதை அமைப்பது பற்றி முடிவு செய்தனர். ஒவ்வொரு அமைப்பினரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மரியாதை செய்ய அனுமதிக்க வேண்டும். முன்னேற்பாடுகளை ஒருங்கி-ணைத்து செய்ய யோசனை தெரிவித்தனர். பின், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் தேர்த்திரு-விழா முன்னேற்பாடு குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அங்கு வந்து செல்லும் தமிழக மற்றும் கர்நாடகா, கேரளா மாநில பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும், கால்நடை சந்தையை பாது-காப்பாக நடத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்ப-டுத்த தேவையான வசதிகள் மேற்கொள்ள யோசனை தெரிவித்தனர்.