/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்வரத்து 8,705 கன அடியாக சரிவு
/
பவானிசாகர் நீர்வரத்து 8,705 கன அடியாக சரிவு
ADDED : ஆக 01, 2024 02:22 AM
புன்செய் புளியம்பட்டி: நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 8,705 கன அடியாக குறைந்தது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. அணை நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பரு-வமழை தீவிரமடைந்து, கனமழை பெய்ததால் கடந்த சில நாட்க-ளாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றின் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணை நீர்மட்டம், 88 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 14 ஆயிரத்து, 916 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 8,705 கன அடியாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 92.60 அடியாகவும், நீர் இருப்பு, 23.3 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து அரக்கன் கோட்-டை-தடப்பள்ளி பாசனத்திற்கு 700 கன அடி நீர்; காளிங்கராயன் பாசனத்திற்கு, 400 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 105 கன அடி தண்ணீர் என மொத்தம், 1,205 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.