/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இருதரப்பு புகாரில் 8 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு புகாரில் 8 பேர் மீது வழக்கு
ADDED : செப் 11, 2024 04:16 AM
ஈரோடு: நஞ்சை ஊத்துக்குளி, சாவடிபாளையம் புதுார், வன்னியர் வீதியை சேர்ந்த கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர் தியாகு, 35; மொடக்குறிச்சி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ரஞ்சித் என்பவ-ருடன் சேர்ந்து விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்தேன். இரண்டாண்டாக வேறு சிலருடன் ரஞ்சித் சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார். இதில் முன் விரோதம் இருந்-தது. கடந்த, ௮ம் தேதி மாலை விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கும் முன், சிலையை முதலில் எடுத்து செல்வது குறித்து இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் புது விநாயகர் வீதி பிரதீப், 24, உமாசங்கர், 23, கிஷோர், 26, மற்றும் ஜீவா, 25, ஆகியோர் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இவ்-வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.இதேபோல் பிரதீப் அளித்த புகாரில் தியாகு, சூர்யா, சங்கர், கவின் தன்னை தகாத வார்த்தையால் திட்டி அடித்ததாக தெரிவித்-திருந்தார். இதன்டி இருதரப்பை சேர்ந்த, ௮ பேர் மீது போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

