/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் குறித்து ஆலோசனை
/
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் குறித்து ஆலோசனை
ADDED : செப் 08, 2024 07:33 AM
நம்பியூர் : பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை கூட்டம், நம்பியூரில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு தலைமை வகித்தார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம், நொய்யல் ஆறு பாதுகாப்பு சங்கம், கவுசிகா நதி கரங்கள், பவானி நதி நீர் பாதுகாப்பு சங்கம், சிறுமுகை விண்ணப்பள்ளி திட்டம், நெல்லித்துறை-காரமடை திட்டம் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து, பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்துக்கு போராட வேண்டும். அக்.,௨ம் தேதி பஞ்,க்களில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில், இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் தொடர்பாக மூத்த பொறியாளர் சங்கம் அரசுக்கு சமர்ப்பித்த, 100 கோடி ரூபாய்
மதிப்பிலான திட்டத்தை, மக்களுடன் பகிர்ந்து அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பாக
முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை,
நவம்பர் மாதம் சந்திக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜன., முதல், இத்திட்டத்தால் பயன்பெறும் மூன்று மாவட்டங்களிலும்,
இருசக்கர வாகன பேரணி நடத்தி நடத்த வேண்டும்.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்ட குழு, வளர்ச்சி சமூக மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு விவசாய
சங்கங்களின் கூட்டமைப்பு, பவானி நதிநீர் பாதுகாப்பு இயக்கம், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக
விவசாயிகள் சங்கம், சிறுமுகை காவிலிபாளையம் திட்டம், கவுசிகா நீர் கரங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்ட அமைப்பினர்,
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.