/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடம்பூரில் சாலை வசதி கேட்டு நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
/
கடம்பூரில் சாலை வசதி கேட்டு நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
கடம்பூரில் சாலை வசதி கேட்டு நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
கடம்பூரில் சாலை வசதி கேட்டு நுாதன முறையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 01:53 AM
சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில் சாலைவசதி கேட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜன-நாயக மாதர் சங்கம் இணைந்து, கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று, நுாதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தியாலத்துார் ஊராட்சி நிர்வாகத்தினர், மக்களுக்கு தேவை-யான அடிப்படை வசதிகளை பலமுறை கோரிக்கை விடுத்தும் செய்து தரவில்லை. சின்னசாலட்டி, கோட்டகாடு, அணைக்காடு, குட்டைகாடு, எள்ளு படுகை ஊர்களில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தார்ச்சாலை அமைக்க ரோட்டில் கொட்டிய ஜல்லி கற்களை அள்ளிச்சென்றதை கண்டித்தும், கான்-கிரீட் தளம் அமைக்க கோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்-தினர்.
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாரதி, மாதர் சங்க மாநில துணை தலைவர் ராணி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர், கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மொட்டை அடித்து, பாடை கட்டியதால், போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். உருவ பொம்மையை எரிக்க முயன்றதால், போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த தொடர் சம்ப-வங்களால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு ஏற்பட்டது.