/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம்
/
வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 31, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வனக்கோட்டத்தில் செயல்படும் வனச்ச-ரகங்களான அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்-னம்பட்டி, ஈரோடு வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், மக்கள் வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கவும், அவற்றை நிறைவேற்றவும் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் கிழமை காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடத்தப்படுகிறது.இதன்படி ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் வரும் செவ்வாய் கிழமை (ஆக.,6ல்) காலை, 11:00 மணிக்கு மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு தலைமையில் நடத்தப்படுகிறது.
விவசா-யிகள், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்-கலாம். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1107ல் புகார் தெரிவிக்கலாம்.