/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மேல்நிலை பள்ளியில் பசுமை மன்றம் துவக்கம்
/
அரசு மேல்நிலை பள்ளியில் பசுமை மன்றம் துவக்கம்
ADDED : ஜூலை 31, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில், பசுமை மன்றம் தொடக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராவுத்தப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிக்கோவில் தீரன் பாசறை தலைவர் பொன்னுசாமி, செயலாளர் துளசிமணி, ஊர் பிரமுகர் நாகராஜன் கலந்து கொண்டனர்.தீரன் பாசறை சார்பாக, மாணவ மாணவியருக்கு மரக்கன்று வழங்கினர். விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றும் நட்டனர்.