/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்
/
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூலை 06, 2024 06:09 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நேற்று துவங்கியது. ஈரோடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில், நடு-நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு துவங்கியது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகுமார் தலைமை வகித்து நடத்-தினார். இதில் பிற மாவட்டம் செல்ல விருப்பம் தெரிவித்து இருவர் விண்ணப்பித்தனர். அதில் ஒருவர் மட்டும் விபரங்களை சமர்பித்தார். தவிர தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மூவர் மட்டுமே பங்-கேற்று, ஆவணங்களை வழங்கினர். இன்று பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள் பணி இடமா-றுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதற்கு, 154 பேர் விண்ணப்பித்-துள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.