/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புற்றுநோய் மருத்துவத்தில் கே.எம்.சி.ஹெச்., சாதனை
/
புற்றுநோய் மருத்துவத்தில் கே.எம்.சி.ஹெச்., சாதனை
ADDED : செப் 07, 2024 08:02 AM
சேலம்: புற்றுநோய்க்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. 10 ஆண்டாக, இம்யூன் மாடுலேட்டிங் தெரபி சிகிச்சை முறை தனி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது, 'சி.ஏ.ஆர்., - டி' எனும் புது வகை இம்யூனோ தெரபி புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த முறையை, கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்-துடன் இந்த முறையில் சிகிச்சையை, 3 முறை மேற்கொண்டுள்-ளது. இது தமிழகத்தில் அதிகளவில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், ''இப்புதிய சிகிச்சை முறை, அதில் புரிந்துள்ள சாதனை, நோயாளிகளுக்கு உலகத்தர சிகிச்சை வசதிகளை அளிப்பதில் கே.எம்.சி.ஹெச்., கொண்டுள்ள உறுதிப்-பாட்டுக்கு ஒரு நற்சான்று,'' என்றார்.
செயல் இயக்குனர் அருண் கூறுகையில், ''புது சிகிச்சை முறை, 3 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பலனளித்துள்ளது. இதுகு-றித்து விபரம் பெற, 73393 33485 என்ற எண்ணில் அழைக்-கலாம்,'' என்றார்.