/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனவு இல்ல திட்டத்தில் 398 பேருக்கு ஆணை
/
கனவு இல்ல திட்டத்தில் 398 பேருக்கு ஆணை
ADDED : ஜூலை 20, 2024 07:16 AM
காங்கேயம் : காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஊராட்சி யூனி-யனுக்கு உட்பட்ட, 398 பயனாளிகளுக்கு, 10.22 கோடி ரூபாய் மதிப்பில், கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
காங்கேயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். இதில் காங்கேயம் யூனியனில், 129 பயனாளிகளுக்கு தலா, 3.50 ரூபாய் லட்சம் மதிப்பீட்டில், 4.51கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; வெள்ளகோவில் யூனியனில், 117 பயனாளிகளுக்கு, 4.09 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; குண்-டடம் யூனியனில், 10 பயனாளிகளுக்கு, 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்கு, 142 பயனாளி-களுக்கு, 1.26 கோடி ரூபாய் மதிப்பீடு என, 398 பயனாளிக-ளுக்கு, 10.22 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான ஆணையை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., பிரகாஷ். திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத் தலைவர் இல.பத்ம-நாபன், காங்கேயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கரு-ணைபிரகாஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.