/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கபாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் விழா நிறைவு
/
கபாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் விழா நிறைவு
ADDED : ஆக 13, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 79வது ஆண்டு திருமுறை விழா மற்றும் 54ம் ஆண்டு, 63 நாயன்மார் விழா, கடந்த, 9ம் தேதி தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும், 63 நாயன்மார்களுக்கும் மலர்கள் சூடி சிறப்பு வழிபாடு நடந்தது. நிறைவு நாளான நேற்று, கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அனைத்து மூல மூர்த்திகள், உற்சவ மூர்த்திகள், அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் பஞ்சமூர்த்திகள் தனித்தனியாகவும், 63 நாயன்மார்கள் ஒரே புஷ்ப விமானத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.