/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயிகள் புகாரால் அதிகாரிகள் ஆய்வு
/
விவசாயிகள் புகாரால் அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 07, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம் பஞ்., தேவநல்-லுாரில், தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு தேங்காய் பவுடர், எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆலை கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தாராபுரம் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா மற்றும் அதிகாரிகள், தேவநல்லுாரில் பாதிக்கப்பட்ட விவசாய
பயிர்களை நேற்று ஆய்வு செய்தனர். ஆலை கழிவுநீரை, மாசு கட்டுப்பாட்டு துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.