/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி கூட்டத்தில் 74 தீர்மானம் நிறைவேற்றம்
/
மாநகராட்சி கூட்டத்தில் 74 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஆக 31, 2024 01:34 AM
ஈரோடு: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், 74 தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன. ஈரோடு மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்-வராஜ், ஆணையாளர் மனிஷ் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி, 54, 55, 56, 57வது வார்டுகளில், மூன்று மாதங்க-ளுக்கு குடிநீர் குழாய்களை பராமரிக்க, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு; முத்தம்பாளையம், காசிபாளையம், ரங்கம்பாளையம் குடிநீருந்து நிலையங்கள் மூலம் குடிநீர்
வினியோகம் செய்யும் பணியை வெளிமுகமை மூலம், ஐந்து பணியாளர்களை நியமித்து மேற்-கொள்ள, 8.25 லட்சம் ரூபாய் நிதி; சோலார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வளாகம்
அமைக்கும் பணிக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க, 26.16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு; 25வது வார்டு கமலா நகர், 26வது வார்டு விநாயகர் கோவில் வீதியில் ஆழ்துளை கிண-றுகளில் புது மோட்டார் பம்ப் மற்றும்
அதற்குண்டான உபகர-ணங்கள் பொருத்த, 5.80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய அனுமதி என்பது உள்பட, 74 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை'மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: மாநக-ராட்சியில் வரி உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமை-யாக பாதிக்கப்பட்டுள்ளனர். 200 ரூபாய் வீட்டு வரி செலுத்திய மக்கள், 12,000 ரூபாய் தற்போது
செலுத்துகின்றனர்.இந்த வரி உயர்வுக்கு மக்களின் கேள்விக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகிறது. அதை பராமரிக்க முடியாமல் ஒப்பந்ததாரர் திணறி வருகின்றனர். வேகத்தடைகளுக்கு வெள்ளை
பெயிண்ட் அடிக்காததால், அடிக்-கடி விபத்து ஏற்படுகிறது. ஹிட்டாச்சி, ஜே.சி.பி உள்ளிட்ட போதிய வாகனங்கள் இல்லாததால், சீரமைப்பு பணிகளை உடன-டியாக மேற்கொள்ள முடியவில்லை.மாநகராட்சியில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் ஹிட்-டாச்சி இயந்திரத்துக்கு, மாதத்துக்கு, 10 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக சொந்தமான புதிய வாக-னத்தை வாங்க வேண்டும்.
வெண்டிபாளையம் கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்துவதோடு, கிடங்கை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையில், 1,000க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும், 26 நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், 30 நாட்கள்
பணியாற்றியதை போல், பயோ மெட்ரிக்கில் கைரேகை பெறப்படுகிறது. கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் ஜெனரேட்டர் வசதியில்லை. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றும்
வரை வாடகையை வாங்க அதிகாரிகள் யாரும் வரக்கூடாது.
கண்டுக்காத அதிகாரிகள்கடந்த இரண்டரை ஆண்டுகளில், இரு முறை மட்டுமே மண்-டல கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்-மானங்கள் குறித்து, அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்-கையும் எடுக்கவில்லை. மண்டல
தலைவர்கள், கவுன்சிலர்களை, அதிகாரிகள் சிறிதும் மதிப்பதில்லை. அரசு விழாக்களிலும் புறக்க-ணிக்கப்படுகிறோம். ஒரு அதிகாரி சொன்னால் பணி நடக்கிறது. கவுன்சிலர்கள் சொன்னால் நடப்பதில்லை. இவ்வாறு
கவுன்சி-லர்கள் பேசினார்.
இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசியதாவது:நிதி நெருக்கடி இருப்பதால், சில வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. குறிப்பாக செலவினம், 5 கோடி ரூபாய் ஆகிறது. வருவாயோ, 2 கோடி ரூபாய் மட்டுமே வருகி-றது. குப்பை சேகரிக்கும் வாகனங்களில்
பற்றாக்குறை நிலவுகி-றது. 188 வாகனங்களுக்கு, 155 மட்டுமே உள்ளது.ஹிட்டாச்சி, ஜே.சி.பி., வாகனங்கள் வாங்குவது தொடர்பாக அர-சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
கூடுதலாக கடைகளை ஒதுக்கியது யார்?36வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் பேசியதாவது: மாநக-ராட்சியில், 36வது வார்டில் மட்டும், 50 சதவீதம் வரி வசூலிக்கப்-படுகிறது. ஆனால், எவ்வித அடிப்படை வசதியும் செய்யப்பட-வில்லை. கனி மார்க்கெட் வணிக
வளாகத்தில், 292 கடைகள் நிர்-ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 10 கடைகள் யாரை கேட்டு ஒதுக்கப்பட்டது. இதில் தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் நடந்தால், அதிகாரிகள் பொறுப்பேற்று கொள்கிறீர்களா? கவுன்-சிலர்
கமிஷன் வாங்கிக் கொண்டு, கூடுதலாக கடைகளுக்கு அனு-மதி தந்துள்ளாரா என வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு நான் என்ன பதில் சொல்வது?. இவ்வாறு அவர் பேசினார்.