/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
-ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஈரோடு ஜி.ஹெச்.,சில் ஆய்வு
/
-ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஈரோடு ஜி.ஹெச்.,சில் ஆய்வு
-ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஈரோடு ஜி.ஹெச்.,சில் ஆய்வு
-ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஈரோடு ஜி.ஹெச்.,சில் ஆய்வு
ADDED : ஜூலை 22, 2024 08:53 AM
ஈரோடு : ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவம-னையில், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளங் குழந்தைகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, புற்-றுநோய் சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டு, நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வகங்கள், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் அறைகளை பார்வையிட்டார். அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, இருப்பில் உள்ள ரத்த வகைகள், முக்கியமான ரத்த வகைகளை தயா-ராக வைத்திருக்க அறிவுறுத்தினார். மருத்துவம-னையில் உள்ள சமையலறைக்கு சென்று சுகா-தாரமாக உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகி-றதா?, லாண்டரி (சலவை) பிரிவுக்கும் சென்று பார்வையிட்டார். இதை தொடர்ந்து நடந்த ஆய்வு கூட்டத்தில் ராஜமூர்த்தி பங்கேற்றார். மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவர், நர்ஸ்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார். ஆய்வு கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அம்பிகா, குடும்ப நல மருத்துவ இணை இயக்-குனர் கவிதா, அரசு மருத்துவமனை கண்காணிப்-பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசி-ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.