sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்

/

வாலிபர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்

வாலிபர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்

வாலிபர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்


ADDED : செப் 04, 2024 09:08 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: மின்வேலியில் சிக்கி பலியான வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, வீரன்கொட்டாயை சேர்ந்தவர் பிரபு, 25; இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர், நேற்று முன்தினம் காலை அதே பகுதியிலுள்ள கண்ணப்பன் என்பவரின் கரும்பு தோட்டம் வழி-யாக சென்றபோது, காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானார். மகேந்திரமங்-கலம் போலீசார், தலைமறைவான கண்ணப்-பனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், பிரபுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், 12:30 மணிக்கு ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில், மகேந்திர-மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் மற்றும் டி.எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் சுப்-பிரமணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்க-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இது குறித்து, 5 பேரை பிடித்து விசாரித்து வருவ-தாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததால், சாலை மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us