/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வன பூஜையை முன்னிட்டு குருநாதசுவாமி கோவில் தேர் வனத்தை நோக்கி சென்றது

ADDED : ஆக 01, 2024 02:22 AM
அந்தியூர்: அந்தியூர், குருநாதசுவாமி கோவில் முதல் வன பூஜையை முன்-னிட்டு, காமாட்சியம்மன் சிறிய சப்பரத்திலும், பெருமாள், குரு-நாத சுவாமி சிறிய தேர்களிலும், பக்தர்கள் தோளில் சுமந்த படி வனக்கோவிலை நோக்கி சென்றனர். அந்தியூர், புதுப்பாளை-யத்தில் பிரசித்திபெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக பண்டிகை நடப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த, 17ல், பூச்சாட்டுதலுடன் பண்-டியை துவங்கி, 24ல், வனக்கோவிலில் கொடியேற்றுதல், நேற்று முதல் வன பூஜை நடந்தது. இதில், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் இருந்து, சிறிய சப்பரத்தில், காமட்சி-யம்மனும், சிறிய தேர்களில் பெருமாளும், குருநாதசுவாமி-யையும், பக்தர்கள் தோளில் சுமந்த படி, வனக்கோவிலுக்கு சென்-றனர். அங்கே சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்-டனர்.இன்று அதிகாலை, மீண்டும் இந்த தெய்வங்கள் வனக்கோவிலில் இருந்து சிறிய சப்பரம், தேர்களில் பக்தர்கள் தோளில் சுமந்தபடி, புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவிலை வந்தடைவர். முன்ன-தாக தேர் செல்லும் முன், பக்தர்கள் தரையில் படுத்து சுவாமியை வழிபட்டனர்.