/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல்
/
கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல்
ADDED : பிப் 22, 2025 05:22 AM
ஓசூர்: அஞ்செட்டி அருகே, கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி பறி-முதல் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் யானை, மான், காட்டெருமை போன்ற பல்வேறு வகையான வன விலங்கு-களை வேட்டையாடுவதை தடுக்க, உரிமம் இல்லாத நாட்டு துப்-பாக்கி வைத்திருப்பவர்கள், தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என, வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டு வருகிறது. உரிமம் இல்லாத துப்பாக்கிகளை கண்டறிய, மோப்ப நாய் உதவியுடன் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், சோதனை செய்யப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அதனால், போலீசார் அல்லது வனத்துறையிடம் ஒப்படைக்க மனம் இல்லாத நபர்கள், தாங்கள் பயன்படுத்தி வந்த உரிமம் இல்லாத துப்பாக்கிகளை, ஆங்காங்கு வீசி வருகின்றனர். இந்நி-லையில், அஞ்செட்டி அருகே சீங்கோட்டை பகுதியில் உள்ள கல்-லறைக்கு அருகில், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்றை, நேற்று முன்தினம் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்துள்-ளனர். அதை வீசியவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வரு-கின்றனர்.

