sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்

/

ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்

ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்

ரூ.2.75 கோடி நிதி தராமல் இழுத்தடிப்பு யூனியன் ஆபீசில் பஞ்., தலைவி போராட்டம்


ADDED : ஜூலை 23, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளுக்கான நிதியை தராமல் இழுத்த-டிப்பதாக கூறி, யூனியன் அலுவலகத்தில் இரவை கடந்து பஞ்., தலைவி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சி புதுார் ஊராட்சி தலைவர் செல்வி, 36; தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்-துக்கு நேற்று மதியம் வந்தார். பதாகையுடன் வளாகத்தின் மத்-தியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

''தனது பஞ்சாயத்து பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கான, 2.75 கோடி ரூபாய் நிதியை, 8 மாத காலமாக தொடர்ந்து வலியுறுத்-தியும், அதிகாரிகள் தர மறுக்கின்றனர். தீர்வு காணும் வரை காத்தி-ருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்,'' என்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்-பாடும் ஏற்படாததால் அவர் சென்றார்.

இதனால் செல்வி தனது போராட்டத்தை தொடர்ந்தார். இரவு வரை போராட்டம் நீடித்த நிலையில், இரவு, 9:00 மணியளவில் தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி வந்தார். செல்வியிடம் நடந்-ததை கேட்டு, அது தொடர்பாக அதிகாரிகளிடம் போனில் பேசினார். பிறகு கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதா-கவும், போராட்டத்தை கைவிடும்படியும் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வி, நிலுவை நிதி தொடர்பான நிர்வாக அனுமதி கிடைக்கும் வரை, நகர மாட்டேன் என்று தெரிவித்து விட்டார். இதனால் தாசில்தாரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்.






      Dinamalar
      Follow us