/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
/
மொபைல் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 13, 2024 07:42 AM
ஈரோடு: பவானி தாலுகா, குப்பிச்சிபாளையம் கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: குப்பிச்சிப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி அருகே தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் பிரமாண்ட டவர் அமைக்கின்றனர்.
எந்த நிறுவனம் என குறிப்பிடாமல், '5ஜி' மின் கோபுரம் அமைக்கப்போவதாக நோட்டீஸ் ஒட்டி, பணிகளை துவங்கி உள்ளனர். அவ்விடத்தில் அங்கன்வாடி, குடியிருப்புகள் உள்ளன. இதுபோன்ற டவர்களில் இருந்து மின்காந்த கதிர்வீச்சு வெளியாகி பல்வேறு பாதிப்பு ஏற்படும் என கூறுகின்றனர். எங்கள் பகுதிக்கு இதுபோன்ற டவர் தேவையில்லை.
பவானி போலீஸ் ஸ்டேஷனிலும் மனு வழங்கி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. மாவட்ட நிர்வாகம் டவர் அமைக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

