/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வக்பு வாரிய திருத்த மசோதா பார்லி கூட்டுக்குழு அமைப்பு
/
வக்பு வாரிய திருத்த மசோதா பார்லி கூட்டுக்குழு அமைப்பு
வக்பு வாரிய திருத்த மசோதா பார்லி கூட்டுக்குழு அமைப்பு
வக்பு வாரிய திருத்த மசோதா பார்லி கூட்டுக்குழு அமைப்பு
ADDED : ஆக 10, 2024 07:47 AM
புதுடில்லி: வக்பு வாரிய திருத்த மசோதா குறித்து ஆராய, 31 எம்.பி.,க்கள் அடங்கிய, பார்லி கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா லோக்சபாவில் நேற்று முன்-தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பார்லி கூட்டுக்குழுவின் பரிசீல-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா குறித்து ஆராய, 31 எம்.பி.,க்கள் அடங்கிய, பார்லி கூட்டுக்குழு அமைக்கப்பட்-டுள்ளது. இதில், 21 லோக்சபா எம்.பி.,க்களும்; 10 ராஜ்யசபா எம்.பி.,க்களும் இடம் பெற்றுள்ளனர்.
கூட்டுக்குழுவில், லோக்சபா எம்.பி.,க்களான பா.ஜ.,வைச் சேர்ந்த ஜெகதாம்பிகா பால், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அபராஜிதா சாரங்கி, சஞ்சய் ஜெய்ஸ்வால், திலீப் சைகியா, அபித் கங்கோபாத்யாய், டி.கே. அருணா.
காங்., சார்பில், கவுரவ் கோகோய், இம்ரான் மசூத், முகமது ஜாவேத்; சமாஜ்வாதியின் மொஹிபுல்லா, தி.மு.க.,வின் ராஜா; ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ராஜ்யசபாவில், பா.ஜ.,வின் பிரிஜ் லால், மேதா விஷ்ரம் குல்-கர்னி, குலாம் அலி, ராதா மோகன் தாஸ் அகர்வால்; காங்கிரசின் சையத் நசீர் உசேன்.
திரிணமுல் காங்கிரசின் முகமது நதிமுல் ஹக்; ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் விஜயசாய் ரெட்டி, தி.மு.க.,வின் முகமது அப்துல்லா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பார்லி கூட்டுக்குழு தலைவரை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ., எம்.பி., ஜெகதாம்பிகா பால், குழுவின் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த குழு, அடுத்த பார்லி கூட்டத்தொடரின் முதல் வாரத்-திற்குள் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும் என, கூறப்படுகிறது.

