ADDED : ஆக 18, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராக சுதா பொறுப்பேற்று கொண்டார்.
இதற்கு முன் கோவை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவில் பணியாற்றினார். இதேபோல் ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டராக சிவகாமி ராணியும், ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டராக கோமதியும் பொறுப்பேற்றனர்.

