ADDED : பிப் 01, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தந்தை வீட்டில் விபரீதம்
டி.என்.பாளையம் : டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி, ஏரங்காட்டூர் புதுகாலனியை சேர்ந்த குமார் மகள் கீர்த்தனா, 17; அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து, ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். கடந்த, 29ம்- தேதி மாலை பெற்றோர் வீட்டுக்கு கீர்த்தனா வந்தார். தந்தை குமார் வழக்கம் போல், 30ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற குமார், மகளை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.