ADDED : பிப் 05, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறப்பு மருத்துவ முகாம்
ஈரோடு :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, ஓட்டுச்சாவடி மையங்களில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி நேற்று நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்பகுதியில் நீர் தேங்கும் இடங்களில் மண்ணை கொட்டி சமப்படுத்தினர். 237 ஓட்டுச்சாவடி மையங்கள், 53 இடங்களில் அமைந்துள்ளது. இந்த, 53 இடங்களிலும் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.