நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் ஊழியர் தர்ணா
கோபி:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், கோபி மின் பகிர்மான வட்டக்கிளை சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கோபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கிளை தலைவர் சேகர் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பாண்டியன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தர்ணா நடந்தது.