ADDED : மார் 02, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மளிகை கடையில் திருட்டு
ஈரோடு:ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் வீதியில், பூங்கொடி என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. நேற்று அதிகாலை கடையை திறக்க வந்தவர், கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாலுகா போலீசார் சென்று
விசாரணை நடத்தினர். ஐந்து பாக்கெட் சிகரெட், ஐந்து மசாலா துாள் பாக்கெட், ஐந்து பிஸ்கட் பாக்கெட், ௧,௦௦௦ ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலில், சிறு உண்டியலை உடைத்து காசுகளை அள்ளி சென்றதும் தெரிந்தது. அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில், கைவரிசை காட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.