ADDED : மார் 06, 2025 01:36 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பி.டி., பருத்தி ரக ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 967 மூட்டை வரத்தானது. இதில் ஒரு கிலோ, 77.15 - 85 ரூபாய் என, 23.64 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடந்த ஏலத்தில், கதளி ரகம் கிலோ, 52 ரூபாய், நேந்திரம் கிலோ, 48 ரூபாய்க்கு ஏலம் போனது. பூவன் தார், 560 ரூபாய், செவ்வாழை தார், 1,350 ரூபாய், ரஸ்தாளி தார், 750 ரூபாய், மொந்தன் தார், 380 ரூபாய் என, 2,300 வாழைத்தார் வரத்தாகி, 5.94 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 12,006 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 47.60 ரூபாய் முதல், 60.91 ரூபாய் வரை, 2.௦௫ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் ஏலதத்துக்கு, 108 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 136.67 முதல், 151 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 88.69 முதல், 133.69 ரூபாய் வரை, விற்றது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 3,272 மூட்டைகளில், ௧.௫௪ லட்சம் கிலோ கொப்பரை வந்தது. முதல் தரம் கிலோ, 138.60 ரூபாய் முதல் 150.10 ரூபாய்; இரண்டாம் தரம், 25.89 ரூபாய் முதல் 148.15 ரூபாய் வரை, ௨.௧௪ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மொத்தம், 178 மூட்டை வந்தது. அதிகபட்சமாக கிலோ, 125.66 ரூபாய்; குறைந்தபட்சம், 111.06 ரூபாய்க்கும் ஏலம் போனது. 10.79 டன் மஞ்சள், 11.43 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* ஈரோடு, வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பெரும்பாலான காய்கறி விலை நேற்று குறைந்தது. விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்திரி-30, வெண்டை-45, பீர்க்கன்-40, புடலை-25, பச்சை மிளகாய்-30, முருங்கைக்காய்-100, முள்ளங்கி-25, பட்டை அவரை-45, சவ்சவ்-20, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, பீட்ரூட்-30, கேரட்-70, உருளை-30, பாவைக்காய்-40, இஞ்சி-50, சுரைக்காய்-10, காலிபிளவர்-25, சக்கரவள்ளி கிழங்கு-35, கருணை கிழங்கு-70, பட்டாணி-40, சின்ன வெங்காயம்-40, பெரிய வெங்காயம்-50, பீன்ஸ்-60, தக்காளி-15 முதல், 20 ரூபாய்.