ADDED : மார் 08, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ஈரோடு:சொத்து வரி, பத்திர பதிவு கட்டணம்,மின் கட்டணம், குப்பை வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஹக்கீம், பொருளாளர் முருகேசன், துணை செயலாளர்கள் மஞ்சு, பிரகாஷ் உள்ளிட்ட 50 பெண்கள், 150 ஆண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.