ADDED : மார் 08, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிப்புணர்வு பேரணி
ஈரோடு:ஈரோடு சி.என்.கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் மாணவ--மாணவிகள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தினர். கல்லுாரி முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார் பேரணியை தொடங்கி வைத்தார். வ.உ.சி., பூங்கா நுழைவு வாயிலில் தொடங்கி வீரப்பன் சத்திரம் வழியாக சென்று கல்லுாரியில் நிறைவடைந்தது. மழை நீரின் முக்கியத்துவம், மழைநீரை சேமிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்தி சென்றனர்.