ADDED : மார் 13, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
பெருந்துறை:பெருந்துறை மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில், முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்புராவ், முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை துவக்க வைத்தார். இதில், 40 மாணவர்கள் பெயர்களை பதிவு செய்தனர். தலைமையாசிரியை செல்வி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம், எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் ரவிசந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் தனபாக்கியம், முத்து
மேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.