ADDED : மார் 20, 2025 01:33 AM
திண்டல் வேளாண் அலுவலகத்தில் ஆய்வு
ஈரோடு:ஈரோடு, திண்டல் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில், திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். தோட்டக்கலை துறையின் கீழ் நுண்நீரில் அதிக பயிர், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என, 13 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், இலக்குகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
மாநில பூச்சி கொல்லி மருந்து பரிசோதனை ஆய்வகம், மாநில அக்மார்க் ஆய்வகம், உழவர் பயிற்சி நிலையம், தகவல் குறியீட்டு மையம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் மண் பரிசோதனை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தார். வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, துணை இயக்குனர் மரகதமணி, நிர்மலா, சாவித்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.