ADDED : மார் 21, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரி செய்யப்படாத உடைந்த பாலம்
தாராபுரம்:தாராபுரம் என்.என்.பேட்டை வீதியில், ராஜவாய்க்கால் உள்ளது. இதன் பக்கவாட்டு சுவர், இரு மாதங்களுக்கு முன் பெய்த மழையில் இடிந்து விழுந்தது. தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட தடுப்பும் சில தினங்களுக்கு முன் மாயமானது. தற்போது திறந்த நிலையில் உள்ளது. பாலத்தை ஒட்டிய பகுதியில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அபாய நிலையில் பயணித்து வருகின்றனர். இதன் அருகே, 10 மீட்டர் துாரத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி முடிந்து இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றன. இத்தனை ஆபத்துகள் வரிசை கட்டி காத்திருக்கும் நிலையில், மேலும் மெத்தனம் காட்டாமல் நகராட்சி நடவடிக்கை எடுக்க, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

