/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
/
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 22, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
ஈரோடு:ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி தலைமை ஆசிரியர் கே.சுமதி தலைமையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். பள்ளியில் புறப்பட்ட பேரணி பிரதான வீதி, சாலைகளில் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. மாணவ, மாணவியர், ஆசிரியர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், சத்துணவு அமைப்பாளர், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு, கடைகளில் வழங்கினர்.