/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோட்ட-மாவட்ட அளவில்விவசாயிகள் குறைகேட்பு
/
கோட்ட-மாவட்ட அளவில்விவசாயிகள் குறைகேட்பு
ADDED : மார் 22, 2025 01:23 AM
திருப்பூர்:திருப்பூர் கோட்ட அள வில், வரும் 25ம் தேதியும், மாவட்ட அளவில், 28ம் தேதியும் விவசாயிகளுக்கான குறை கேட்பு கூட்டம் நடக்கவுள்ளது.
திருப்பூர், குமரன் ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 25ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் தாலுகா விவசாயிகள், தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் குறைகேட்கிறார்.
மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், அறை எண், 240ல், 28ம் தேதி கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் பிரச்னைகளை மனுவாக அளிக்கலாம். கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களில், ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் கோரிக்கைகள் குறித்து பேசலாம். அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.
குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் நுண்ணுயிர் பாசனம் அமைக்க ஏதுவாக, வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் உரிய ஆவணங்களை கொண்டுவந்து, நுண்ணுயிர் மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்துகொள்ளலாம்.