ADDED : மார் 25, 2025 12:52 AM
ஈரோடு:ஈரோடு, பெரியார் நகர், அசோகபுரியை சேர்ந்த ராஜா மகள் துளசி, 15; அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். பக்கத்து தெருவில் உள்ள அண்ணனை பார்த்து வருவதாக, 22ம் தேதி இரவு சென்றவர் வீடு திரும்பவில்லை. துளசியின் தாய் அன்புக்கரசி புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
*ஈரோடு, வைராபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த துணி வியாபாரி சுரேஷ், 40; சுரேஷின் நண்பர்கள் மாதேஸ்வரன், முருகன், வினோத் குமார் ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற பின் தலைமறைவாகி விட்டனர். சுரேஷிடம் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் அவர் மாயமாகி விட்டார். மனைவி ரோகினி புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
* கோபி அருகே நாகதேவம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 20ம் தேதி கல்லுாரி சென்ற ஸ்ரீதேவி வீடு திரும்பவில்லை. அவரின் தந்தை பண்ணாரி புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.