/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
த.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 25, 2025 12:53 AM
த.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஈரோடு:தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மயில்துரையன் முன்னிலை வைத்தார். மாநில துணை பொதுச்செயலாளர் நளினி சாந்தகுமாரி பேசினார்.
சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை, நேரடியாக காவிரி மற்றும் பவானி ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் தொடங்கி விட்டதால் அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குமார், பொருளாளர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளோடு அப்பாரு, சந்திரசேகர், மகளிர் அணி மாவட்ட தலைவி காஞ்சனா, செயலாளர் சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.