/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தன நிகழ்வு
/
பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தன நிகழ்வு
ADDED : மார் 27, 2025 01:37 AM
பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தன நிகழ்வு
அந்தியூர்:அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நடப்பாண்டு பங்குனி குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவின், முக்கிய நிகழ்வான, மகிஷாசுரமர்த்தனம் என்னும் எருமைக்கிடா வெட்டும் நிகழ்வு நேற்று காலை, கோவில் எதிரே நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து அம்மன் அழைப்பு நடந்தது. அம்மன் உத்தரவு கிடைத்த பிறகு, குண்டம் அருகில் பலி கொடுக்கும் இடத்தில் எருமைக்கிடா வெட்டி மூடப்பட்டது. கோவிலுக்கு வழங்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் ஏலம் விடப்பட்டன. துர்கை வழிபாட்டுக்குழு சார்பில், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
கலந்து கொண்டனர்.