/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி மூன்ரோட்டில் நிழற்கூடம் எதிர்பார்ப்பு
/
பவானி மூன்ரோட்டில் நிழற்கூடம் எதிர்பார்ப்பு
ADDED : மார் 28, 2025 01:00 AM
பவானி மூன்ரோட்டில் நிழற்கூடம் எதிர்பார்ப்பு
பவானி: பவானி-மேட்டூர் சாலையில் அமைந்துள்ளது மூன்ரோடு. ஒருபுறம் மைலம்பாடி, ஒலகடம், வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையும், மறுபுறம் மேட்டூர், மேச்சேரி, தொப்பூர் செல்லும் சாலையும், பவானி, ஈரோடு செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. சுறுசுறுப்பாக சாலை இயங்கும் நிலையில், இப்பகுதியில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூடம் இல்லை. இதனால் பல ஊர்களுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் வெயிலில் காத்து கிடக்கின்றனர். இதுகுறித்து பல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பது, அப்பகுதி மக்களின் குமுறலாக உள்ளது. நிழற்கூடம் இல்லாததால் வெயில் காலத்தில் வாடியபடியும், மழை வந்தால் இடம் தேடி ஓடும் நிலையும் உள்ளது. பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கருப்பணன், நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.