/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆண்கள் மட்டுமேபங்கேற்ற குண்டம் விழா
/
ஆண்கள் மட்டுமேபங்கேற்ற குண்டம் விழா
ADDED : மார் 28, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்கள் மட்டுமேபங்கேற்ற குண்டம் விழா
கோபி:கோபி தாலுகா தடப்பள்ளி கிராமம் காசிபாளையத்தில், பழமையான கரியகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் குண்டம் விழா நடக்கிறது.
நடப்பாண்டு விழா கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று அதிகாலை அம்மை அழைத்தல் நடந்தது. இதை தொடர்ந்து தலைமை பூசாரி வெங்கடேசன், குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து, காலை, 6:30 மணிக்கு முதலில் இறங்கி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து காசிபாளையம், சிங்கிரிபாளையம், காந்திநகர், மணியக்காரன்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும், 350 பேர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.