/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காசநோய், வெப்ப தாக்கம்பாதுகாப்பு விழிப்புணர்வு
/
காசநோய், வெப்ப தாக்கம்பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஏப் 03, 2025 01:50 AM
காசநோய், வெப்ப தாக்கம்பாதுகாப்பு விழிப்புணர்வு
ஈரோடு:ஈரோடு அடுத்த நசியனுார் மூலக்கரையில், தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான காசநோய் ஒழிப்பு மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
காசநோய் பரவுதல், நுரையீரல் காசநோய் அறிகுறி, பாதிப்பு, பரிசோதனை, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்பாடு, அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்துக்கள், கோடை வெப்ப சூழலில் அடிக்கடி நீர் பருகுதல், கோடை கால உணவு முறைகள், ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயாரித்தல் குறித்து பயிற்சி, விழிப்புணர்வு தரப்பட்டது.
மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், முதுநிலை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

