/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விண்ணப்பள்ளியில் குடிநீர் கேட்டு மறியல்
/
விண்ணப்பள்ளியில் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஏப் 04, 2025 01:22 AM
விண்ணப்பள்ளியில் குடிநீர் கேட்டு மறியல்
புன்செய்புளியம்பட்டி :புன்செய்புளியம்பட்டியை அடுத்த விண்ணப்பள்ளி பஞ்., புதுரோடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதர தேவைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, மோட்டார் மூலம் நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி வினியோகிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வினியோகம் இல்லை. இதை கண்டித்து பெண்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர், புன்செய்புளியம்பட்டி-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புதுரோடு பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புன்செய்புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காலனி பகுதியில்,தண்ணீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் உறுதியளிக்கவே, கலைந்து
சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் புதுரோடு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக, பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி தெரிவித்தார்.

