/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம், தாராபுரத்தில்மின்வாரிய குறைதீர் முகாம்
/
காங்கேயம், தாராபுரத்தில்மின்வாரிய குறைதீர் முகாம்
ADDED : ஏப் 04, 2025 01:23 AM
காங்கேயம், தாராபுரத்தில்மின்வாரிய குறைதீர் முகாம்
காங்கேயம்:காங்கேயம் கோட்ட மாதாந்திர மின் பயனீட்டாளர் சிறப்பு முகாம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்தில் நாளை காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கவுள்ளது. இதில் மின் பயனீட்டாளர் மின் கட்டண தொகை, மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம், சேதமான மின்கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட மின்வாரியம் தொடர்பான புகார்களை தெரிவித்து தீர்வு காண, காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் விமலாதேவி தெரிவித்துள்ளார்.
* தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் விடுத்துள்ள அறிக்கை: தாராபுரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் முகாம், நாளை காலை, 11:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, தாராபுரம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் மின் நுகர்வோர் பங்கேற்று பயனடையலாம் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.