/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு
/
ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு
ADDED : ஏப் 05, 2025 01:49 AM
ஓட்டுச்சாவடி அமைக்கவலியுறுத்தி மக்கள் மனு
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த முத்து கவுண்டம் பாளையம் பகுதி மக்கள், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நந்தவனம்பாளையம் ஊராட்சி இரண்டாவது வார்டு முத்து கவுண்டம்பாளையம் மற்றும் ஆத்தி காட்டுப்புதுாரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். நாங்கள், 5 கி.மீ., தொலைவில் உள்ள நந்தவனம் பாளையத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று வாக்களிக்கிறோம். இதனால் முதியோர் சிரமப்படுகின்றனர். எனவே முத்து கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி அமைத்து நாங்கள் சிரமமின்றி ஓட்டளிக்க உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

