ADDED : ஏப் 15, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்: தந்தை புகார்
ஈரோடு:ஈரோடு, கீழ் திண்டல், முத்து நிலையத்தை சேர்ந்த டெய்லர் செல்வம் மகள் இதயா, 17; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்தார். வீட்டில் இருந்த நிலையில் மாயமானார். கடந்தாண்டு ஜூன் மாதம் இதேபோல் வெளியே சென்றார். புகாரின்படி விசாரித்த தாலுகா போலீசார், மாணவியை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் மீண்டும் மாயமாகியுள்ளார். செல்வம் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.