ADDED : ஏப் 15, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவியை அடித்த
கணவன் கைது
தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்த உப்புத்துறை பாளையத்தை சேர்ந்த பெயின்டர் சதீஷ்குமார், 30; இவரின் மனைவி கார்த்திகா, 29; தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கார்த்திகா தனியாக வசிக்க துவங்கினார். மேலும் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் கார்த்திகாவை நேற்று காலை வழிமறித்து சதீஷ்குமார் தாக்கி தகராறு செய்துள்ளார். கார்த்திகா புகாரின்படி தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.